Jul 16, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் சின்னத்தைத் தவிர்த்து பெர்சாத்து சொந்த சின்னத்தில் போட்டி
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் சின்னத்தைத் தவிர்த்து பெர்சாத்து சொந்த சின்னத்தில் போட்டி

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.16-

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெர்சாத்து கட்சியானது, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சின்னத்தைப் பயன்படுத்தாமல், தனது சொந்தக் கட்சிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற கட்சியின் உச்ச மன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெர்சாத்து தலைவர் டான் ஸ்ரீ Muhyiddin Yassin, வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் மற்ற சில கட்சிகளும் பெர்சாத்து சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மற்ற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் பெர்சாத்து சின்னத்தில் போட்டியிட அனுமதி வழங்கும் அதிகாரத்தை கட்சியின் உச்ச மன்றம் தமக்கு வழங்கியுள்ளதாகவும் Muhyiddin தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், எத்தனை தொகுதிகளில் பெர்சாத்து போட்டியிடும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், கட்சியின் வேட்பாளர் பட்டியல் வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து பெர்சாத்து விலகுகிறதா? என்ற கேள்விக்கு, அது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகு அது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் Muhyiddin தெரிவித்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல்: 2 இந்தியர்கள் உட்பட 25 வேட்பாளர்களை அறிவித்தது பாரிசான் நேஷனல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: 2 இந்தியர்கள் உட்பட 25 வேட்பாளர்களை அறிவித்தது பாரிசான் நேஷனல்

மலாக்கா அரசில் ஜசெகவின் முடிவு மாறாது: பிரதமர் அன்வாரிடம் அந்தோணி லோக் திட்டவட்டம்

மலாக்கா அரசில் ஜசெகவின் முடிவு மாறாது: பிரதமர் அன்வாரிடம் அந்தோணி லோக் திட்டவட்டம்

மலாய் ஒற்றுமையால் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும்: துன் மகாதீர் கருத்து

மலாய் ஒற்றுமையால் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும்: துன் மகாதீர் கருத்து

ஜோகூர் தேர்தல் தோல்வி: மலாய் வாக்காளர்களின் ஆதரவு சரிவே முக்கிய காரணம்

ஜோகூர் தேர்தல் தோல்வி: மலாய் வாக்காளர்களின் ஆதரவு சரிவே முக்கிய காரணம்

"தைப்பிங் சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் இல்லை"– உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் தகவல்

"தைப்பிங் சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் இல்லை"– உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் தகவல்

நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரத்தில் அரச குடும்பத்தை இழுக்க வேண்டாம் - அன்வார் எச்சரிக்கை

நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரத்தில் அரச குடும்பத்தை இழுக்க வேண்டாம் - அன்வார் எச்சரிக்கை