Sep 24, 2026
Thisaigal NewsYouTube
மலாய் ஒற்றுமையால் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும்: துன் மகாதீர் கருத்து
அரசியல்

மலாய் ஒற்றுமையால் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும்: துன் மகாதீர் கருத்து

Share:

மலாய் சமூகத்தின் ஒற்றுமை மூலமே அவர்களின் அரசியல் அதிகாரத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்பதை அண்மைய ஜோகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

ஜோகூர் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி 48 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், மகாதீர், இதனைத் தங்களின் அரசியல் பலத்தை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முக்கிய நகர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த ஒற்றுமையின் மூலம் பெறப்படும் அரசியல் பலத்தை தவறுகளை நியாயப்படுத்தவோ அல்லது மற்ற சமூகங்களின் உரிமைகளைப் பறிக்கவோ பயன்படுத்தக் கூடாது என்றும், நாட்டின் அனைத்து சமூகங்களின் நல்வாழ்வையும் உறுதி செய்யவே இந்த பலம் பயன்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News