Jul 15, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: 36 தொகுதிகளில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் / 5 இந்தியர்களுக்கு வாய்ப்பு
அரசியல்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: 36 தொகுதிகளில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் / 5 இந்தியர்களுக்கு வாய்ப்பு

Share:

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது 36 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை கோலா பிலா, டத்தாரான் மேலாங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பக்காத்தான் கூட்டணியின் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.

இந்தத் தேர்தலில் பிகேஆர் 16 தொகுதிகளிலும், ஜசெக 11 தொகுதிகளிலும், அமானா 9 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

வேட்பாளர் பட்டியலில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் பிகேஆர் சார்பில் ஸ்ரீ தஞ்சுங் தொகுதியில் டத்தோ டாக்டர் ஜி. ராஜசேகரன் மீண்டும் போட்டியிடுகிறார்.

மேலும் ஜி. மணிவண்ணன் ஜெராம் பாடாங் தொகுதியில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஜசெக சார்பில் வீரபன் சுப்பிரமணியம் ரெப்பா தொகுதியிலும், ஜெ. அருள் குமார் நீலாய் தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

அதேவேளை, எஸ். முகுந்தன், சிரம்பான் ஜெயா தொகுதியில் முதல் முறையாக களமிறங்கும் புதிய இந்திய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான நெகிரி செம்பிலான் இடைக்கால மந்திரி பெசாரும், மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த தனது பாரம்பரிய சிகாமட் தொகுதியிலிருந்து இந்த முறை லிங்கி தொகுதிக்கு மாற்றப்பட்டு போட்டியிடுகிறார்.

சிகாமட் தொகுதியில் அவருக்குப் பதிலாக அவரது அரசியல் செயலாளர் நூர் அஸ்மான் முகமது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில், ஜசெக தேசியத் தலைவரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக், தொடர்ந்து நான்காவது முறையாக சென்னா தொகுதியில் களமிறங்குகிறார்.

இதனிடையே, நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார், பக்காத்தான் ஹராப்பானுக்கு மீண்டும் மக்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்கினால், மாநில அரசும், கூட்டரசு அரசாங்கமும் இணைந்து மேலும் சிறப்பாக செயல்பட்டு, வளர்ச்சியின் பலன் அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதிசெய்ய முடியும் என்று தெரிவித்தார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் போட்டியிட்ட 19 தொகுதிகளில் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

இம்முறையும் அனுபவமிக்க தலைவர்கள், புதிய முகங்கள் மற்றும் பல்வேறு சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரத்தில் அரச குடும்பத்தை இழுக்க வேண்டாம் - அன்வார் எச்சரிக்கை

நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரத்தில் அரச குடும்பத்தை இழுக்க வேண்டாம் - அன்வார் எச்சரிக்கை

அபாயகரமான லிங்கி தொகுதிக்கு மாறுகிறார் அமினுடின் ஹாரூன்: பி.எச் கோட்டையைத் தக்கவைக்க அதிரடி அரசியல் நகர்வு

அபாயகரமான லிங்கி தொகுதிக்கு மாறுகிறார் அமினுடின் ஹாரூன்: பி.எச் கோட்டையைத் தக்கவைக்க அதிரடி அரசியல் நகர்வு

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

மலாக்கா அரசில் அதிகாரப் பகிர்வு இல்லை; புத்ராஜெயா மாதிரி மட்டுமே: முதலமைச்சர்  ரவுஃப் விளக்கம்

மலாக்கா அரசில் அதிகாரப் பகிர்வு இல்லை; புத்ராஜெயா மாதிரி மட்டுமே: முதலமைச்சர் ரவுஃப் விளக்கம்

அதிரடி திருப்பம்: மலாக்கா மாநில ஆட்சியிலிருந்து  வெளியேறுகிறது ஜசெக.

அதிரடி திருப்பம்: மலாக்கா மாநில ஆட்சியிலிருந்து வெளியேறுகிறது ஜசெக.