கோலாலம்பூர், டிசம்பர்.01-
மேலவை உறுப்பினருக்கான பதவிக் காலம் முடிவடையவிருக்கும் மூன்று அமைச்சர்கள், இரண்டாவது தவணையாக செனட்டர் பதவிக் காலம் புதுப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மூன்று அமைச்சர்களும் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற மேலவையில் இரண்டாம் தவணையாக செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் மற்றும் சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் ஆகியோரே செனட்டராகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் அமைச்சர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








