Oct 10, 2026
Thisaigal NewsYouTube

குற்றச்சாட்டை மறுத்துள்ளார் சாங் லீ காங்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குற்றச்சாட்டை மறுத்துள்ளார் சாங் லீ காங்

கோலாலம்பூர், மே.29-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தனது ஆதரவைத் திரும்பப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் பிகேஆர் உதவித் தலைவர் சாங் லி காங். அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சரும் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினருமான சாங் லீ காங், சமூக ஊடகங்களில் பரவும் இத்தகையக் கூற்றுகள் "அறிவிற்கு பொருந்தாதவை" என்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

பிகேஆர் கட்சியின் சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகியோர் அமைச்சரவைப் பதவிகளில் இருந்து விலகியது, மக்களாட்சி முறையையும் கண்ணியத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் காட்டுகிறது என்று அவர் கூறினார். இத்தகையச் சூழ்நிலையில் "கலங்கிய நீரில் மீன் பிடிக்க" மற்றவர்கள் முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →