Apr 19, 2026
Thisaigal NewsYouTube
4 பெர்சத்து தொகுதிகள் கலைக்கப்பட்டதாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது, கட்சி அரசியலமைப்புக்கு எதிரானது – அஸ்மின்
அரசியல்

4 பெர்சத்து தொகுதிகள் கலைக்கப்பட்டதாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது, கட்சி அரசியலமைப்புக்கு எதிரானது – அஸ்மின்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.18-

பெர்சத்து கட்சியின் லாரூட் , லெம்பா பந்தாய், கெப்பாலா பத்தாஸ் மற்றும் தஞ்சோங் ஆகிய நான்கு தொகுதிகள் கலைக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலை பெர்சத்து கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நடவடிக்கை அடிப்படை ஆதாரமற்றது என்றும் கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில், சில தொகுதிகளின் உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்த நான்கு தொகுதிகளும் கலைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களிலும் ஊடக அறிக்கைகளிலும் வெளியான தகவல்கள் குறித்து பெர்சத்து தலைமையகம் புகார்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

கட்சியின் விதிகளின்படி, தொகுதி நிர்வாகக் குழுவினர் பதவி விலகினாலும், அத்தொகுதிகள் தானாகக் கலைந்துவிடாது என்றும், அத்தொகுதிகள் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News