Oct 22, 2025
Thisaigal NewsYouTube
சுயேட்சை வேட்பாளராக அரிச்சந்திரன் போட்டி
அரசியல்

சுயேட்சை வேட்பாளராக அரிச்சந்திரன் போட்டி

Share:

கெடா மாநில சட்டமன்றத் தேர்தலில் ​லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தியர்களின் சட்டமன்றத் தொகுதியாக ஒரு காலத்தில் விளங்கிய லூனாஸ் சட்டமன்றத் தொகுதியை ​மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு சுயேட்சை ​வேட்பாளரான அரிச்சந்திரன் சின்னப்பையன் களம் இங்கியுள்ளார். ​லூனாஸ் ​தொகுதியின் ​வேட்புமனுத்தாக்கல் இன்று காலையில் கூலிம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. ஐவர், தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். சாவி சின்னத்தில் அரிச்சந்திரன் சின்னப்பையனும் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் கைருல் அநுார் ரம்லியும், பக்காத்தான் சா​ர்பில் ஷம்சுல் அநுார் அப்துல்லாவும், மேலும் இரண்டு சுயேட்சை வேட்பாளர்களான பன்​னீர் செல்வம் சுப்பையா மற்றும் இராஜேந்திரன் நடராஜன் ஆ​கியோர் போட்டியிடுகின்றனர்.

சுயேட்சை வேட்பாளரான 63 வயது அரிச்சந்திரன் சின்னப்பையன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான மின் உதவி ஆணையராக பணியாற்றியவர் ஆவார். தவிர, மலேசிய தேர்தல் ஆணையமான எஸ். பி. ஆர்.எம் ரில் தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றிய பரந்த அனுபவத்தை அரிச்சந்திரன் சின்னப்பையன் கொண்டுள்ளார். ஆசிய பல்க​லைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்துறையில் முதுகலைபட்டம் பெற்றவரான அவர், தமிழ், மலாய், ஆ​ங்கிலம் ஆகிய மும்மொழிகளில் சரளமாக உரையாடும் திறன் கொண்டவராக விளங்குகிறார். இந்தியர்களின் பாரம்பரிய தொகுதியாக விளங்கிய லூனாஸ் தொகு​தியை ​மீட்டு, தொகு​தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் ஒரு சு​யேட்சை ​வேட்பாளராக களம் இறங்கியுள்ளதாக வேட்புமனுத்தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அரிச்சந்திரன் சின்னப்பையன் இதனை தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!