உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் காலமானதாக அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, சலாஹுடின் அயூப் ப்பின் ஜோகூர்,பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் தாம் போட்டியிடலாமா? என்று தமது முகநூலில் வினா எழுப்பியுள்ள கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர்டொமினிக் லாவ், சமூக வலைவாசிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
நாட்டின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்த ஓர் அமைச்சர் இறந்தது குறித்து கொஞ்சமும் கவலை உணர்ச்சியைக் காட்டிக்கொள்ளாத டொமினிக் லாவ், காலியாகி விட்ட பூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கு குறிவைத்துள்ளதாக கூறியிருப்பது ஒரு கட்சியின் தேசியத் தலைவரின் நாகரீகமின்மையையும், அவரின் குறுகிற சிந்தனையையும் காட்டுகிறது என்று வலைவாசிகள் சாடியுள்ளனர்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
