Aug 28, 2026
Thisaigal NewsYouTube
பக்காத்தான் ஹராப்பான்  கூட்டணியை வீழ்த்த பாரிசான் நேஷனலுக்கு  வாக்களிக்க பாஸ் அழைப்பு: அம்னோ பாராட்டு!
அரசியல்

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை வீழ்த்த பாரிசான் நேஷனலுக்கு வாக்களிக்க பாஸ் அழைப்பு: அம்னோ பாராட்டு!

Share:

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியைத் தோற்கடிப்பதற்காக, இருமுனைப் போட்டி நிலவும் இடங்களில் பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாதி அவாங் விடுத்துள்ள அழைப்பு, அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாக சிலாங்கூர் அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் ஜைடி முகமட் ஜைன் பாராட்டியுள்ளார்.

இதன் மூலம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை வீழ்த்த இதுவே வழி என்று பாஸ் கட்சி தெளிவாக சமிக்ஞையை காட்டியுள்ளது. ஆனால், பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிதீன் யாசின், தனது ஆதரவாளர்களுக்கு இப்படி எந்த உத்தரவும் தர மறுத்துவிட்டார். பெர்சத்து கட்சிக்கு அம்னோ மீதுள்ள வெறுப்பு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை வீழ்த்துவதை விடப் பெரியதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒரே கூட்டணியில் இருக்கும் பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகள் வெவ்வேறு கருத்துக்களைக் கூறுவதால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர் என்றும், இந்நிலையில் பாரிசான் நேஷனல் கூட்டணி மட்டுமே நிலையான ஆட்சியைத் தர வல்லது என்றும் முகமட் ஜைன் விளக்கியுள்ளார்.

Related News