நவ. 24-
கெடா மாநிலத்தை பாஸ் கட்சியிடம் இருந்து மீட்டு தங்களால் மேம்படுத்த முடியும் என்பதை பாக்காத்தான் ஹரப்பான் - பார்சான் நேசனல் கூட்டணி கெடா மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக மலாய் வாக்காளர்களை கவர்ந்திழுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், பெரும்பாலான மலாய் வாக்காளர்கள் இன்னும் பாஸ் கட்சியை ஆதரித்து வருகின்றனர் என Felo Majlis Profesor Negara, Azmi Hassan கருத்துரைத்துள்ளார்.
இந்த இரு கட்சிகளின் கூட்டணி, கெடா மாநிலத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கும். இந்த கூட்டணி வெற்றி பெற, திறமையான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அதே சமயம், கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என Azmi Hassan குறிப்பிட்டார்.








