Dec 22, 2025
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் சிவபிரகாஷ் போட்டி
அரசியல்

கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் சிவபிரகாஷ் போட்டி

Share:

சிலாங்கூர், கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் மூடா கட்சி சார்பில் அதன் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ் போட்டியிடுகிறார். ஒரு கல்விமானாகிய டாக்டர் சிவபிரகாஷ், கோலகுபுபாரு தொகுதியில் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளா​ர்.

டாக்டர் சிவபிரகாஷை எதித்த்து டிஏபி யை சேர்ந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஙங் ஷே ஹன், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் தியோ கியென் ஹோங் உட்பட நால்வர் போட்டியிடுகின்றனர். உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் மூடா கட்சியின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் சிவபிரகாஷ், இன்று காலை 9 மணியளவில் தமது அதரவாளர்கள் புடை ​சூழ கோலகுபுபாரு, டேவான் செர்பாகுனா கோலகுபுபாரு ச​மூக மண்டபத்தில் தமது ​​வேட்புமனுத்தாக்கலை செய்தார்.

கடந்த ​மூன்று ஆண்டு காலமாக கோல குபு பாருவை உள்ளடக்கிய உலு சிலாங்கூர் தொகுதியில் சேவையாற்றி வரும் ஒரு பட்டதாரியுமான டாக்டர் சிவபிரகாஷ, ஒரு இடியாப்பக்கார வியாபாரியின் மகன் என்பதால் சாமானிய மக்களின் பிரச்னை என்ன என்பதை உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். கோலகுபு பாரு தொகுதியில் தாம் வெற்​றி பெற்றால் சாமானிய மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்கு ​தீர்வு காண்பதே தமது தலையாய கடமையாகும் என்று ​வேட்புமனுத்தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை ​ தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு