Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல்: 401 வாக்குச்சாவடிகளில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: 401 வாக்குச்சாவடிகளில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.01-

16-வது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 401 வாக்குச் சாவடிகளில் தொடங்கியது.

மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், 8 லட்சத்து 59 ஆயிரத்து 760 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மொத்தம் 36 தொகுதிகளில் 103 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். பக்காத்தான் ஹராப்பான் 36 தொகுதிகளிலும், பாரிசான் நேஷனல் 25, பெர்சத்து 24, பெரிக்காத்தான் நேஷனல் 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

மலாய் வாக்குகள் சிதறாமல் இருக்க பாரிசான் நேஷனல்–பெரிக்காத்தான் நேஷனல் இடையே தொகுதி உடன்பாடும் அமலில் உள்ளது.

இதற்கிடையில், இன்று பிற்பகலில் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என MetMalaysia எச்சரித்துள்ளது.

72 முதல் 75 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கும் நிலையில், அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று நள்ளிரவுக்கு முன்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் நெருக்கடி: துவாங்கு நசாருடின் வெளியேறினார்... சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்தில் பதற்றம் தணிந்தது

நெகிரி செம்பிலான் நெருக்கடி: துவாங்கு நசாருடின் வெளியேறினார்... சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்தில் பதற்றம் தணிந்தது

நெகிரி செம்பிலான் அரசுக்கு அதிகாரம் இல்லை... மாநில அரசு செயலாளரை இடைநீக்கம் செய்ய முடியாது என ஏஜிசி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் அரசுக்கு அதிகாரம் இல்லை... மாநில அரசு செயலாளரை இடைநீக்கம் செய்ய முடியாது என ஏஜிசி அறிவிப்பு

மலாக்கா தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்: மொத்தம் 3,150 போலீசார் குவிப்பு

மலாக்கா தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்: மொத்தம் 3,150 போலீசார் குவிப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்