Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் நெருக்கடி: துவாங்கு நசாருடின் வெளியேறினார்... சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்தில் பதற்றம் தணிந்தது
அரசியல்

நெகிரி செம்பிலான் நெருக்கடி: துவாங்கு நசாருடின் வெளியேறினார்... சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்தில் பதற்றம் தணிந்தது

Share:

நெகிரி செம்பிலானில் துவாங்கு நசாருடினைச் சுற்றி நிலவிய பரபரப்புக்குப் பின்னர், இன்று நண்பகலுக்குப் பிறகு அவர் சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அங்கு நிலைமை சீரடைந்தது.

துவாங்கு நசாருடினும், நியமனங்கள் சர்ச்சைக்குள்ளான நான்கு உண்டாங்களும் இன்று பிற்பகல் 12.15 மணியளவில் தங்களது அதிகாரபூர்வ வாகனங்களில் மண்டபத்திலிருந்து வெளியேறினர்.

அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட போலீசாரும் நிலைமை கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அம்பாங்கான் அருகிலுள்ள அந்த மண்டபத்தைச் சுற்றி முன்னதாக போலீஸ் லாரிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. துவாங்கு நசாருடினும் நான்கு உண்டாங்களும் மண்டபத்துக்குள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, துவாங்கு நசாருடினை சந்திக்க மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மேற்கொண்டிருந்த சந்திப்பு பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், துவாங்கு நசாருடினையும் நான்கு உண்டாங்களையும் வெளியே செல்ல போலீஸ் தடுப்பு ஏற்படுத்தப்பட்டதாக அவர்களின் வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர். ஆனால், இந்தக் கூற்று குறித்து போலீசார் தரப்பில் உடனடி உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

Related News