நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளர் டத்தோ முஹமட் ஸாஃபிர் இப்ராஹிம் மற்றும் மாநில சட்ட ஆலோசகர் டத்தோ முஸால்மா முஸ்தஃபா கமால் ஆகியோர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதனிடையே, புதிய மாநிலச் செயலாளர் நியமிக்கப்படும் வரை, மாநில நிதி அதிகாரி டத்தோ மஸ்ரி ரஸாலி, மாநிலச் செயலாளரின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.
புதிய மாநில சட்ட ஆலோசகர் நியமிக்கப்படும் வரை, சட்ட ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஃபாஹ்மி அடிலா மேற்கொள்வார் என்றும் இஸ்மாயில் லாசிம் தெரிவித்தார்.
மேலும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவிகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும், மாநில நிர்வாகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.








