Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நாளை வெளியிடப்படுகிறது பாரிசான் நேஷனலின் தேர்தல் கொள்கை அறிக்கை
அரசியல்

நாளை வெளியிடப்படுகிறது பாரிசான் நேஷனலின் தேர்தல் கொள்கை அறிக்கை

Share:

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பாரிசான் நேஷனல் கூட்டணியின் தேர்தல் அறிக்கை நாளை இரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அதன் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தோல்வியடைந்ததால் பாதியில் நின்றுபோன மாநில மேம்பாட்டுத் திட்டங்களை மீண்டும் தொடர்ந்து வலுப்படுத்துவதே இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை சபா மாநில தேர்தல் அறிக்கையை நகலெடுத்து தயாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த அவர், இது வெறும் உளவியல் போர் மட்டுமே என்றார். மேலும், 'போஸ்டர் பாய்' எனப்படும் மந்திரி பெசார் வேட்பாளர் யார் என்பதை விட, தற்போதைக்கு தேர்தலில் வெற்றி பெறுவதற்கே தங்களின் தேர்தல் இயந்திரம் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் தோக் மாட் தெளிவுபடுத்தினார்.

Related News