போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகும் தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து நாடு திரும்பியதும், தமது ராஜினாமா கடிதத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் வழங்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
இன்று ஹாங்ஸாவ் சென்றடைந்த போது செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி லோக், “முடிவு எடுக்கப்பட்டுவிட்டது” என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பு விவகாரத்தைத் தொடர்ந்து, ஜசெக மத்தியச் செயலவை முடிவின்படி தாம் பதவி விலக முன்வந்ததாக அந்தோணி லோக் முன்னதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே, லோக் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் அன்வார் இன்று கேட்டுக் கொண்டிருந்தார்.








