போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், தமது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு நிபந்தனை மன்னிப்பு வழங்கப்பட்ட விவகாரத்தில், அந்தோணி லோக் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அந்த முடிவை அவர் எதிர்க்கவே முயன்றதாகவும் அன்வார் கூறியுள்ளார்.
அரசாங்கத்தைச் சீர்குலைக்க விரும்புவோரின் அழுத்தத்துக்கு ஜசெக அடிபணியக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அந்தோணி லோக்குடன் மேலும் கலந்துரையாடி, ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தாம் கேட்டுக் கொள்ளப் போவதாகவும் அன்வார் தெரிவித்தார்.








