Oct 23, 2025
Thisaigal NewsYouTube
ஒரே மாதிரியான திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும்
அரசியல்

ஒரே மாதிரியான திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும்

Share:

டிச. 22-

SejaTi MADANI என்றழைக்கப்படும் மடானி சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் கிராம முன்னேற்றக் செயற்குழுக்கள், உள்ளூர் சமூகத்தின் சமூக - பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof வலியுறுத்தினார். ஒரே மாவட்டத்தில் இருந்து ஒரே மாதிரியான திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அனைத்துத் திட்ட விண்ணப்பங்களும் பல கட்ட மதிப்பீடுகளைக் கடந்து செல்லும். கிராம முன்னேற்றக் செயற்குழுக்கள் மாவட்ட அலுவலகத்துடன் கலந்துரையாடி பொருத்தமானத் திட்டங்கள் குறித்து ஆலோசனை பெறலாம். திட்டங்கள் மாநில மேம்பாட்டு அலுவலகம் வாயிலாகவும் பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு மூலமும் அங்கீகரிக்கப்படும்.

இதுவரை சரவாக்கில் 1,124 கிராம முன்னேற்றக் செயற்குழுக்கள் SejaTi MADANI திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன. இதன் மூலம் விவசாயம், உணவு, கைவினைப் பொருட்கள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளில் சுமார் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

LUBOK ANTU மாவட்டத்தில் எட்டு கிராம முன்னேற்றக் செயற்குழுக்களுக்கு 7 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டது. இந்த நிதி விவசாயம், மீன், கோழி வளர்ப்பு, சுற்றுலா போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்தத் திட்டம் உள்ளூர் மக்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் வகையில் இருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

Related News