Oct 15, 2026
Thisaigal NewsYouTube

கிளந்தானிடம் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மன்னிப்புகேட்க வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிளந்தானிடம் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மன்னிப்புகேட்க வேண்டும்

டிச. 30-

மேன்மைத் தங்கிய கிளந்தான் சுல்தான், சுல்தான் Muhammad V- யை சந்தித்து, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr Akmal Salleh மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாநில பிகேஆர் தலைவர் Ezzat Hanuzi கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு, அப்போதைய மாமன்னரான கிளந்தான் சுல்தான் வழங்கிய பொது மன்னிப்பு குறித்து தற்போது கேள்வி எழுப்பியதற்காக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர், அக்மால், சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முறையான நடைமுறையின் கீழ் பிரதமருக்கு வழங்கப்ட்ட பொது மன்னிப்பை ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி எழுப்புவது என்பது சுல்தானின் முடிவை கேள்வி எழுப்புவதற்கு ஒப்பாகும். எனவே சுல்தானை சந்தித்து, அக்மால் மன்னிப் கேட்க வேண்டும் என்று Ezzat Hanuzi கோரிக்கை விடுத்தார்.

அன்வாரின் பொது மன்னிப்பு விண்ணப்பம், எந்த அளவிற்கு மன்னிப்பு வாரியத்திடம் கொண்டு செல்லப்பட்டது என்று அக்மால் எழுப்பியுள்ள கேள்வி தொடர்பில் Ezzat Hanuzi எதிர்வினையாற்றியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →