Sep 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநில அரசாங்கத்தில் அம்னோ தொடருமா? – ஆகஸ்ட் 8 கூட்டத்தில் ஆலோசனை
அரசியல்

பினாங்கு மாநில அரசாங்கத்தில் அம்னோ தொடருமா? – ஆகஸ்ட் 8 கூட்டத்தில் ஆலோசனை

Share:

பினாங்கு மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ தொடர்ந்து இடம் பெறுமா? என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.

Barisan Nasional மற்றும் Perikatan Nasional இடையேயான அதிகரித்து வரும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வரும் ஆகஸ்ட் 8 -ஆம் தேதி நடைபெறவுள்ள Penang Pakatan Harapan கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தல் அல்லது மாநிலத் தேர்தலுக்கான தயார் நிலை தொடர்பாக துணைக் குழுக்களின் அறிக்கைகள் பெறப்படும் என்றும், அப்போது பினாங்கு மாநில அரசாங்கத்தில் Barisan Nasional-ன் எதிர்கால நிலை குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் Chow Kon Yeow தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari-யின் கருத்துக்கு பதிலளித்த சோவ் கோன் இயாவ், ஒவ்வொரு அரசியல் கூட்டணிக்கும் தங்களது தேர்தல் வியூகத்தை வகுக்கும் முழு உரிமை இருப்பதாகக் கூறியுள்ளார்.

எனினும், எந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை இறுதியில் தீர்மானிப்பது வாக்காளர்களே என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு

ராஜினாமா முடிவு குறித்து அந்தோணி லோக்கை சந்திக்கிறார் அன்வார்: இருவரும் சீனப் பயணத்தின் போது ஆலோசிக்க வாய்ப்பு

ராஜினாமா முடிவு குறித்து அந்தோணி லோக்கை சந்திக்கிறார் அன்வார்: இருவரும் சீனப் பயணத்தின் போது ஆலோசிக்க வாய்ப்பு

அந்தோணி லோக் ராஜினாமா முடிவு: ‘பட்டாசு அரசியல்’ என சனுசி நோர் விமர்சனம்

அந்தோணி லோக் ராஜினாமா முடிவு: ‘பட்டாசு அரசியல்’ என சனுசி நோர் விமர்சனம்

ஜசெக வெளியேற வேண்டும் என சில தரப்பினர் காத்திருக்கின்றனர் – அந்தோணி லோக்

ஜசெக வெளியேற வேண்டும் என சில தரப்பினர் காத்திருக்கின்றனர் – அந்தோணி லோக்