Sep 21, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு
அரசியல்

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு

Share:

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்களை யாங் டிபெர்துவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து இஸ்தானா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களது பதவியேற்பு உறுதிமொழியையும், யாங் பெர்துவான் பெசாருக்கு அளித்த விசுவாச உறுதிமொழியையும் மீறியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்பு இந்த உறுதிமொழிகளை எடுத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நெகிர் செம்பிலான் அரசியலமைப்பின்படி, மந்திரி பெசாரைத் தவிர மற்ற ஆட்சிக் குழு உறுப்பினர்கள் யாங் டிபெர்துவான் பெசாரின் Yang விருப்பத்தின் பேரில் பதவியில் நீடிப்பார்கள் என்றும், நீக்கப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் செப்டம்பர் 15-ஆம் தேதி மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வெளியிட்ட கருத்துகள் மூலம் தங்களது உறுதிமொழியை மீறியதாகவும் இஸ்தானா தெரிவித்துள்ளது.

இதனிடையே, புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கான வேட்பாளர் பட்டியலை மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், யாங் டிபெர்துவான் பெசாரின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சி தடையின்றி தொடர்ந்து செயல்படுவதையும், மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News