மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட ஒரு புதிய முகமான சுந்தரராஜு சோமு மகத்தான வெற்றி பெற்றார். பினாங்கு, முன்னாள் துணை முதல்வர் டாக்டர் P. இராமசாமி, கடந்த மூன்று தவணைக்காலம் தற்காத்து வந்த பிறை சட்டமன்றத் தொகுதியில் சுந்தரராஜு சோமுவின் இந்த வெற்றியின் மூலம் பக்காத்தான் ஹராப்பான் அத்தொகுதியை தற்காத்துக்கொண்டது. நான்கு முனைப்போட்டி நிலவிய பிறை தொகுதியில் சுந்தரராஜுவிற்கு 10,311 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரும், செபெராங் பெராய் முன்னாள் நகராண்மைக்கழக உறுப்பினருமான டேவிட் மார்ஷலுக்கு 1,419 வாக்குகளும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் சிவசுந்தரம் ராஜலிங்கத்திற்கு 1,492 வாக்குகளும், மூடா கட்சி வேட்பாளர் விக்னேஸ்வரி ஹரிகிருஷ்ணனுக்கு 358 வாக்குகளும் கிடைத்தன. சொத்து மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான சுந்தரராஜு, 8,819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


