Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கட்சியில் நியமனப் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கட்சியில் நியமனப் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்

அம்பாங், ஜூன்.01-

பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைக் தற்காத்துக் கொள்வதில் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து தாம் வகித்து வந்த பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினமா செய்துள்ள ரஃபிஸி ரம்லி, கட்சியின் வழங்கக்கூடிய நியமனப் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

நியமனப் பதவியை ஏற்றுக் கொள்வதில் தமக்கு ஆர்வமில்லை என்று ரஃபிஸி ரம்லி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஆற்றல் வாய்ந்தவரான ரஃபிஸி ரம்லி, துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள இயலாவிட்டாலும் நியமனப் பதவி வாயிலாக அவர் கட்சிப் பொறுப்பை வகிக்க வேண்டும் என்று கட்சியின் புதிய துணைத் தலைவரான நூருல் இஸா முன் வைத்துள்ளதாகக் கூறப்படும் பரிந்துரை குறித்து ரஃபிஸி ரம்லி எதிர்வினையாற்றினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →