அம்னோ மகளீர் பிரிவுத் தலைவர் நினைவுறுத்து
நாட்டின், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைத்தன்மையை உறுதி செய்ய, அம்னோவின் தலைவர்களும் உறுப்பினர்களும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணியை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அம்னோவில் மகளீர் பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நூரைனி அமாட் தெரிவித்துள்ளார்.
அம்னோ இனி மேலாதிக்கக் கட்சியாக இல்லை என்றும், வரவிருக்கும் மாநிலத் சட்டமன்றத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் போட்டியிட முடியாது என்றும் டாக்டர் நூரைனி அமாட் குறிப்பிட்டார்.
இந்நிலையை எதிர்நோக்குவதற்கு பதிலாக ஒற்றுமை அரசாங்கத்துடன் இணைய ஒப்புக்கொண்டு அதற்கு வெற்றியைக் கொண்டுவரும் படி அக்கட்சிக்கு டாக்டர் நூரைனி அமாட் நினைவூட்டினார்.
மேலும், பாரிசான் நேசனலின் வெற்றியை உறுதி செய்வது மட்டுமல்லாமல், கூட்டணி அரசாங்கத்தில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் அம்னோ பெறுவதற்கு, அக்கட்சிகள் போட்டியிடும் இடங்களை பெற உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.