Jan 18, 2026
Thisaigal NewsYouTube
பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!
அரசியல்

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.18-

தேசிய முன்னணியின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையே, குறிப்பாக ம.இ.கா-வுடன் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் தற்போது முழுமையாகச் சுமூகமடைந்து விட்டதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையிலும் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்களிலும் ம.இ.கா தலைவர்கள் கலந்து கொண்டது, அக்கட்சி தேசிய முன்னணியின் மீது கொண்டுள்ள விசுவாசத்தைத் தெளிவாகப் பறைசாற்றுகிறது.

ம.இ.கா கூட்டணியை விட்டு வெளியேறக்கூடும் என்று நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இத்தீர்வானது ஒரு "கோப்பையில் எழுந்த புயல்" ஓய்ந்தது போன்றது என அவர் வர்ணித்தார்.

Related News