அண்மைய காலமாக மலேசியாவில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கிலும் இன நிலையிலானத் தூண்டுதல்களை ஏற்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருவது குறித்து புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற விவகாரங்களில் வெறும் கண்டனங்களுடன் நிறுத்திக்கொள்ளாமல், சட்ட அமலாக்கத் துறையினர் பாகுபாடின்றி விரைவாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, வெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோக்கள் பரவுவதை மலேசியத் தகவல் தொடர்பு - பல்லூடக ஆணையம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பிரதமர் இது குறித்துத் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பொதுமக்களும் இத்தகைய சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பகிராமல் பொறுமையைக் கடைப்பிடிப்பதன் மூலமே நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் பாதுகாக்க முடியும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல்
மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை
Related News

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு

எரிபொருள் மானியம்: மாதத்திற்கு 320 கோடி ரிங்கிட்டை மலேசிய அரசு ஏற்கிறது

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்


