Jun 25, 2026
Thisaigal NewsYouTube
மேற்காசிய போர் எதிரொலி: எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பாக சிறப்புக் கூட்டம்
அரசியல்

மேற்காசிய போர் எதிரொலி: எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பாக சிறப்புக் கூட்டம்

Share:

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக, உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கத்தை சமாளிக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க போக்குவரத்து அமைச்சு சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் சில முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், குறிப்பாக குறுகிய கால நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அவற்றில், உணவுப் பொருட்கள் ஏற்றுமதி-இறக்குமதி செய்யும் சரக்கு விமான போக்குவரத்து சேவைகள், தற்போதைய சவாலான சூழ்நிலையிலும் தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் ஹரி ராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு, அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Related News