மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், மலேசியாவில் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் போதுமான அளவில் உள்ளதாக உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு உறுதியளித்துள்ளது. போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தாலும், அதைக் காரணங்காட்டி விலைகளைத் தன்னிச்சையாக உயர்த்தக் கூடாது எனத் துணை அமைச்சர் டத்தோ புசியா சாலே எச்சரித்துள்ளதோடு, விலையேற்றத்தைக் கண்காணிக்க 'Ops Pantau' சோதனை நாடு முழுவதும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது வணிகர்களிடம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான இருப்பு உள்ள நிலையில், நியாயமற்ற முறையில் விலையை உயர்த்தும் தரப்பினருக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு, ஆதாயமீட்டல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


