மேற்காசியப் போர் பதற்றத்தால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையிலும், மக்கள் மீதான சுமையைக் குறைக்கப் பெட்ரோல், டீசலுக்கான மாதாந்திர மானியத் தொகையான 320 கோடி ரிங்கிட்டை அரசே ஏற்றுக்கொள்வதாக இரண்டாம் நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிதிச் சீர்திருத்தங்கள் மூலம் கிடைத்துள்ள நிதியைக் கொண்டு இந்தப் கூடுதல் சுமையைத் தாங்கிக்கொள்ள முடிவதாகவும், இதன் மூலம் 'BUDI-95' திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்ந்து நன்மையடைவதை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புவிசார் அரசியல் சூழல்கள் சவாலாக இருந்தாலும், நாட்டின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளதால் இந்த விலை உயர்வை எதிர்கொண்டு பொருளாதாரச் சமநிலையைப் பேண அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என அவர் மேலும் கூறினார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


