Jun 25, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்
அரசியல்

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

Share:

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

மேற்காசிய நாடுகளுக்கிடையிலான போர் பதற்றத்தையும் நிலையற்ற புவிசார் அரசியல் சூழலையும் கருத்தில்கொண்டு, அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை அமல்படுத்துவது குறித்து மலேசிய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பான பரிந்துரையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, அதனை முறையாக ஆய்வு செய்யுமாறு அரசாங்கத் தலைமைச் செயலாளருக்கும் பொதுச்சேவைத் தலைமை இயக்குநருக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த இறுதி முடிவு வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார். எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அண்டை நாடான தாய்லாந்து ஏற்கனவே இத்தகைய முறையை அமல்படுத்தியுள்ள நிலையில், மலேசியாவிலும் இது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

Related News