Jun 25, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்
அரசியல்

பள்ளிகளில் தீவிரவாதம் ஊடுருவுவதைத் தடுக்க கண்காணிப்புகள் தீவிரம் – கல்வி அமைச்சு தகவல்

Share:

கல்வி நிறுவனங்களில் தீவிரவாதம் மற்றும் ஆயுத இயக்கங்களில் மாணவர்கள் ஈடுபடுவது குறித்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம், தீவிரவாத சிந்தனைகள் கல்வி நிறுவனங்களில் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

மேலும், தீவிரவாத சிந்தனைகளின் தாக்கத்திலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும் பாதுகாக்க, அமலாக்க அமைப்புகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் பட்லினா சிடேக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தீவிரவாதத்திற்கு எதிராக போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், மூன்று சிறார்கள் உட்பட ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் மீண்டும் தேஷ் பயங்கரவாத அமைப்பை உயிர்ப்பிக்கும் திட்டம் முறியடிக்கப்பட்டதாக கடந்த வாரம் டத்தோ ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News