கோலாகங்சார், இஸ்தானா இஸ்கந்தரியாவில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் போது, பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் வசூலிக்கப்பட்ட 5.67 மில்லியன் ரிங்கிட் ஜக்காத் தொகையைப் பேரா மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா அவர்கள் ஏற்றுக்கொண்டார். எட்டு தனியார் நிறுவனங்களும், மூன்று தனிநபர்களும் வழங்கிய இந்த ஜக்காத் நிதியில், அதிகபட்சமாக KPJ ஹெல்த்கேர் நிறுவனம் 1.38 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது. சுல்தான் அவர்கள் பெற்றுக்கொண்ட இந்த மொத்தத் தொகையையும் பேரா மாநில இஸ்லாமிய சமய, மலாய் கலாச்சார மன்றத்தின் டான் ஸ்ரீ முகமட் அனுவார் சைனியிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


