Jan 18, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!
அரசியல்

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.18-

எதிர்வரும் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில், ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் கொள்கையில் டி.ஏ.பி உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். அரசியல் கூட்டணியில் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்த ‘வெற்றி பெற்றவருக்கே முன்னுரிமை’ எனும் கொள்கை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த மாநிலத் தேர்தலில் டி.ஏ.பி வெற்றி பெற்றிருந்த டுசுன் துவா சட்டமன்றத் தொகுதியை அம்னோவிற்குக் விட்டுக் கொடுத்ததன் மூலம் தனது உண்மையான ஒத்துழைப்பை கட்சி நிரூபித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். இத்தகைய தியாகங்கள் கூட்டணியின் வெற்றிக்காகச் செய்யப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், டி.ஏ.பி ஒரு போதும் ஒத்துழைக்கவில்லை என்ற வாதத்தை அவர் மறுத்தார். கட்சியில் உட்கட்சிப் பூசல்கள் ஏதுமில்லை என்று குறிப்பிட்ட அவர், ஒரு வலுவான தலைமைத்துவத்தின் கீழ் அனைவரும் ஓரணியாக நின்று நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதாகத் தெளிவுபடுத்தினார்.

Related News

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!

மலாய்-இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணி: அன்வாரிடம் முன்னரே ஆலோசித்தார் ஸாஹிட் ஹமிடி!

மலாய்-இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணி: அன்வாரிடம் முன்னரே ஆலோசித்தார் ஸாஹிட் ஹமிடி!

சிலாங்கூர் டிஏபி சாதனை: ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக வாய்ப்பு!

சிலாங்கூர் டிஏபி சாதனை: ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக வாய்ப்பு!

மீண்டும் இணைந்த உறவு: பி.பி.பி (PPP) கட்சி பாரிசான் நேஷனலில் ஐக்கியம்!

மீண்டும் இணைந்த உறவு: பி.பி.பி (PPP) கட்சி பாரிசான் நேஷனலில் ஐக்கியம்!

அனைத்து மலாய் கட்சிகளையும் ஒன்றிணைக்க ஒரு 'பெரிய கூட்டணி': ஸாஹிட் ஹமிடி திட்டம்

அனைத்து மலாய் கட்சிகளையும் ஒன்றிணைக்க ஒரு 'பெரிய கூட்டணி': ஸாஹிட் ஹமிடி திட்டம்

பாடாங் செராயில் சேவை மையம்: 16-வது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிகுறியல்ல - சைஃபுடின் விளக்கம்

பாடாங் செராயில் சேவை மையம்: 16-வது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிகுறியல்ல - சைஃபுடின் விளக்கம்