கினாபாத்தாங்கான், ஜனவரி.19-
கினாபாத்தாங்கான் மற்றும் லாமாக் இடைத்தேர்தல்களில் மொத்தம் 196 போலீஸ் அதிகாரிகள் நாளை செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே வாக்களிக்க உள்ளனர்.
கினாபாத்தாங்கான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளன.
மும்முனைப் போட்டி நிலவும் கினாபாத்தாங்கான் தொகுதியில், பாரிசான் நேஷனல் வேட்பாளர் நாயிம் குர்னியாவான் புங்கை எதிர்த்து, வாரிசான் கட்சியைச் சேர்ந்த டத்தோ சாடி அப்துல் ரஹ்மானும் சுயேட்சை வேட்பாளரான வழக்கறிஞர் கோல்டாம் ஹாமிட்டும் போட்டியிடுகின்றனர்.
மேலும், லாமாக் சட்டமன்றத் தொகுதியில், பாரிசான் நேஷனல் வேட்பாளர் முஹமட் இஸ்மாயில் அயோப்பை எதிர்த்து வாரிசான் கட்சியைச் சேர்ந்த அப்துல் மாலேக் சுவாவும் போட்டியிடுகின்றனர்.
கினாபாத்தாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் கடந்த ஆண்டு, டிசம்பர் 5ஆம் தேதி, உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, அவரது தொகுதிகளில் இந்த இடைத்தேர்தலானது நடைபெறவுள்ளது.
வரும் ஜனவரி 24-ஆம் தேதி, வாக்குப்பதிவு நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.








