மலாக்கா, ஜனவரி.04-
"உண்மையிலேயே துணிச்சல் இருந்தால், முதலில் மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து வெளியேறி உங்கள் உறுதியை நிரூபியுங்கள்" என அம்னோ இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அக்மாலுக்கு மலாக்கா அமானா கட்சித் தலைவர் Ashraf Mukhlis Minghat அதிரடிச் சவால் விடுத்துள்ளார்! மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் 'சிவப்புக் கோடு ' மீறப்பட்டதாகக் காரணம் சொல்வதை நிறுத்தி விட்டு, நஜிப் ரசாக்கின் நீதிமன்றத் தீர்ப்புகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள் என Ashraf சாட்டையடி கொடுத்துள்ளார்.
நாட்டின் மிக முக்கியமான தற்காப்பு, கல்வி, கிராமப்புற மேம்பாடு போன்ற துறைகளைத் கையில் வைத்துக் கொண்டு, இன்னும் என்ன குறையைக் கண்டு அம்னோ வெளியேறத் துடிக்கிறது என அமானா கட்சிப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. "தோற்றுப் போன Muafakat Nasional கூட்டணிக்கு மீண்டும் உயிர் கொடுக்க நினைப்பது உங்கள் விருப்பம், ஆனால் தோல்வி வரலாற்றை மறந்து விடாதீர்கள்" என அமானா விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, மலாக்கா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.








