கோலாலம்பூர், நவ. 18-
கோலாலம்பூரில் பிரபல பேரங்காடி மையத்தில் சீனமொழி ஆக்கிரமித்துக்கொண்டு இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த பேரங்காடி மையம் முழுவதும் சீனமொழி ஆக்கிரமித்துக்கொண்டு இருப்பது தம்மை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாக துன் மகாதீர் தமது முகநூல் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய வர்த்தகத் தளங்களில் சீனமொழி பயன்பாடு, தேசிய அடையாளத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
நாம் சீனாவின் ஒரு பகுதியாக மாறிவிட்டோமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அந்த பேரங்காடியில் சீனமொழி பயன்பாடு இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.








