Dec 22, 2025
Thisaigal NewsYouTube
கோல குபு பாரு இடைத்தேர்தலில் PAS கட்சி புறக்கணிப்பதாக கூறப்படுவது உண்மையல்ல
அரசியல்

கோல குபு பாரு இடைத்தேர்தலில் PAS கட்சி புறக்கணிப்பதாக கூறப்படுவது உண்மையல்ல

Share:

ஹுலு சிலாங்கூர், ஏப்ரல் 29-

கோல குபு பாரு இடைத்தேர்தலில் பெரிக்காதான் நசியனால் வேட்பாளரை ஆதரித்து மேற்கொள்ளப்படும் பரப்புரைகளில், PAS கட்சியின் ஒத்துழைப்பு குறித்து முன்வைக்கப்படும் எதிர்மறையான கருத்துகளை யாரும் நம்பக்கூடாது என பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கேட்டுக்கொண்டார்.

சம்பந்தப்பட்ட தேர்தலில், தங்கள் கூட்டணியின் வேட்பாளரும் ஹுலு சிலாங்கூர் பெர்சத்து-வின் இடைக்கால தலைவருமான கைருல் அஸ்ஹாரி சௌத்-ட்டை வெற்றி பெற செய்யும் நோக்கில், டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தலைமையிலான PAS கட்சியினர், தேர்தல் பணிப்படைகளை வலுபடுத்தி வருவதோடு கடுமையாக உழைத்து வருவதாக, ரட்ஸி ஜிடின் கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிகழ்வின் போது, ஹாடி அவாங், பெர்லிஸ்-சில் இருந்தது தொடர்பாக PKR கட்சியின் தகவல் பிரிவு தலைவர் பாஹ்மி பட்ஜில் கேள்வி எழுப்பியிருந்தத வேளை அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

இதனிடையே, பெர்லிஸ்-சில் நடைபெற்ற PAS கட்சியின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் ஹாடி அவாங் கலந்துக்கொண்டிருந்ததாகவும் ரமலான் மாதத்திற்கு முன்பே, அவரது வருகை முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் PAS கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி, இதற்கு முன்பு பாஹ்மி -க்கு பதிலளித்திருந்தார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்