கோலாலம்பூர், டிச. 16-
முதலீடு, வர்த்தகத் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸைப்ருல் அப்துல் அஸிஸ், அம்னோவிலிருந்து விலகி, PKR கட்சியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், பிகேஆர் கட்சியில் இணைவது குறித்து இன்னும் எந்தவொரு தீர்க்கமான முடிவிற்கும் தாம் வரவில்லை என்று அந்த பொருளாதார நிபுணர் கூறுகிறார்.
சிலாங்கூர் மாநில அரசின் முக்கியப் பதவி ஒன்றுக்கு தெங்கு ஸைப்ருலை கொண்டு வருவதற்காக அவருடன் பிகேஆர் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த போதுத் தேர்தலில் அம்னோ சார்பில் கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிட்டு, சுதாதார அமைச்சர் டத்தேஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட்டிடம் தோல்விக் கண்ட சிலாங்கூர் அம்னோ பொருளாளருமான தெங்கு ஸப்ருல், பிகேஆர் கட்சியில் இணைவது முலம் தமக்கு வழங்கப்படவிருக்கும் பதவி குறித்து விவாதித்தாக கூறப்படுவதையும் வன்மையாக மறுத்துள்ளார்.