கோலாலம்பூர், ஜூன் 04-
6.6 பில்லியன் வெள்ளி மதிப்பை உட்படுத்திய அரசாங்கத்தின் சொத்துகளில் முறைகேடு புரிந்ததாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், கருவூல முன்னாள் தலைமை செயலாளர் டான் ஸ்ரீ முகமட் இர்வான் செரிகர் அப்துல்லா ஆகிய இருவர் மீதான வழக்கு விசாரணை, இம்மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசு தரப்பு வழங்கியுள்ள ஆவணங்களை அவ்விரு தரப்புகளின் வழக்கறிஞர்கள் ஆராய்வதற்கு ஏதுவாக, அந்த இரு வாரக்கெடுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி , டத்தோ முஹம்மது ஜமீல் ஹுசின் இன்று வழங்கினார்.
அரசாங்கத்தின் சொத்துகளில் முறைகேடு புரிந்ததாக அவ்விருவரும் 6 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர்.








