Oct 24, 2025
Thisaigal NewsYouTube
சிவபிராகாக்ஷிக்கு தொடர்ந்து ஆதரவு பெருகுகிறது
அரசியல்

சிவபிராகாக்ஷிக்கு தொடர்ந்து ஆதரவு பெருகுகிறது

Share:

வேட்பு மனுத் தாக்களுக்கு பிறகு நான்காவது நாளாக தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்திருக்கும் மூடா கட்சியின் கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் ரா. சிவபிரகாஷ், மக்களின் அடிப்படை பிரச்னைகளை கேட்டறிவதே தமது முதற்பணியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு வட்டாரத்திற்கோ அல்லது ஓர் அமைப்பிற்கோ மக்கள்தான் அடிப்படையாகும்.

மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றி எந்தவொரு அமைப்பு வளர முடியாது. அந்த வகையில் மக்களின் பிரச்னையை கேட்டு அறிவதில் கடந்த 4 நாட்களாக செவியாக இருந்து செயல்ப்பட்டு வருவதாக மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத்தலைவருமான டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

கோலகுபு பாருவில் உள்ள வணிகத் தலங்களிலும், உணவகங்களிலும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை நேரடியாக சென்று ஆதரவு திரட்டி வரும் டாக்டர் சிவபிரகாஷ் கடந்த 4 நாட்களில் மக்கள் தமக்கு அளித்து வரும் ஆதரவு உற்சாகத்தையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில் மக்கள் தம்மிடம் முன்வைதுள்ள பலதரப்பட்ட கோரிக்கைகளையும் தாம் ஆராய்ந்து வருவதாக டாக்டர் சிவபிரகாஷ் தெரிவித்தார்.

Related News