Oct 28, 2025
Thisaigal NewsYouTube
சூலு விவகாரத்தில் பின்னணியில் உள்ள அந்த துரோகிகள் அடையாளம் காட்டப்படுவர்
அரசியல்

சூலு விவகாரத்தில் பின்னணியில் உள்ள அந்த துரோகிகள் அடையாளம் காட்டப்படுவர்

Share:

சபா பிரதேச உரிமையை கோருவதில் தங்களை சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு தரப்பினர் வழக்கு தொடத்த விவகாரத்தில் அதன் பின்னணியில் உள்ள துரோகிகள் அடையாளம் காட்டப்படுவர் என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதேச உரிமை தொடர்பான வழக்கில் அனைத்து மேல்முறையீடுகளும் முடிவடைந்தப் பின்னர் இவ்விவகாரத்தில் பின்னணியில் இருந்த செயல்பட்டவர்கள் மக்களுக்கு அடையாளம் காட்டப்படுவர் என்று அஸலினா குறிப்பிட்டார்.

அந்த துரோகிகள் நாட்டிற்குள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பானின் செலாயாங் எம்.பி. வில்லியம் சிங்கம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் Azalina மேற்கண்டவாறு கூறினார்.

சபாவில் பிரதேச உரிமையை கோருவதில் நாட்டின் இறையாண்மைக்கு சவால் விட்ட நபர்களின் பின்னணியில் இருந்தவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும் என்று வாரிசான் எம்.பி. டத்தோஸ்ரீ ஷாஃபி அப்தால்கோரிக்கை விடுத்தார்.

ஜூலு தொடர்புடைய வழக்குகளில் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிவடைந்தப் பின்னர் அந்த துரோகிகள் நிச்சயம் அடையாளம் காட்டப்படுவர் என்று அஸாலினா மேலும் விளக்கினார்.

Related News

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம்  திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம் திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்