கினபாத்தாங்கான், நவம்பர்.24-
சபா தேர்தலுக்குப் பிறகு, தேசிய முன்னணியைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கட்சி தாவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி எச்சரித்துள்ளார்.
தற்போது கட்சித் தாவல் தடைச் சட்டம் அமலில் உள்ளதால், அது போன்ற நடவடிக்கைகளுக்கு சாத்தியமில்லை என்றாலும் கூட, அவ்வாறு முயற்சி செய்பவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நடந்தது போல் இந்த முறை நடக்காமல் தடுக்க இது போன்ற நடவடிக்கைகள் அவசியம் என்றும் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் 45 வேட்பாளர்களையும் கடுமையாக உழைத்து, ஆட்சியைக் கைப்பற்ற வலியுறுத்தியுள்ளார்.








