Jun 27, 2026
Thisaigal NewsYouTube
பொதுத் தேர்தலில் அம்னோ தனித்துப் போட்டியிடலாம்
அரசியல்

பொதுத் தேர்தலில் அம்னோ தனித்துப் போட்டியிடலாம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-

பாரிசான் நேஷனலின் முதுகெலும்பாக விளங்கும் அம்னோ, வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடக்கூடும் என்று அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே கோடி காட்டியுள்ளார்.

16 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கட்சிகளுடன் இணைந்து, அம்னோ இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. ஆனால், தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அக்மல் சலே குறிப்பிட்டார்.

அம்னோ இன்று சிலருடன் இணைந்து இருக்கலாம். அடுத்த வாரம் அதன் முடிவு வேராக இருக்கலாம். மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் தேவையைப் பொறுத்து அம்னோ முடிவு செய்யும் நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அம்னோ தனித்துப் போட்டியிடுவது மூலம் அது கட்சிக்கு பலன் அளிப்பதாக இருக்குமானால் கட்சி உறுப்பினர்கள் அது குறித்து தீர்க்கமாக முடிவு எடுப்பர் என்று அவர் மேற்கோள்காட்டினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்