நவ. 24-
வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணி மேற்கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய நடவடிக்கைகளை அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, வலியுறுத்தியுள்ளார். அவற்றில் முதன்மையாக, பெண்களையும் இளைஞர்களையும் வேட்பாளர்களாக முன்னிறுத்த இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், வயது மட்டுமின்றி, அடிப்படை நிலை மக்களிடையே செல்வாக்கு செலுத்தும் திறன் கொண்டவர்களை வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்..
மேலும், அரசாங்க கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடனான உறவை வலுப்படுத்துதல், சமூக ஊடகங்களில் திறமையை மேம்படுத்துதல், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய முன்னணி - நம்பிக்கைக் கூட்டணி இடையேயான இட ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மக்களின் நலன், அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் புதிய திட்டங்கள் மூலம், தேசிய முன்னணி வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் அகமாட் ஸாஹிட்.








