Jun 25, 2026
Thisaigal NewsYouTube
கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்
அரசியல்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

Share:

பெர்சாத்து கட்சியின் உதவித் தலைவர் ரொனால்ட் கியான்டி மற்றும் மகளிர் பிரிவுத் தலைவர் மஸ் எர்மியாதி சம்சுடின் ஆகியோருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, தாம் அக்கடிதத்தைப் பெற்றதாகவும், அதற்கு விளக்கம் அளிக்க இன்றே கடைசி நாள் என்றும் கியான்டி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மஸ் எர்மியாதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் விளக்கம் அளிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், அக்கடிதத்திற்கு விளக்கம் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவது உறுதி என்று குறிப்பிட்டுள்ள இருவரும், கட்சி என்ன முடிவெடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைத் தலைவர் ஹம்சாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அவர்கள் இருவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News