Jun 25, 2026
Thisaigal NewsYouTube
பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்
அரசியல்

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

Share:

பாங்காக்கில் நடந்த எந்தவொரு கூட்டத்திலும் தான் பங்கேற்கவில்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

"பாங்காக் நகர்வு" என்று சில கட்சிகள் அதனை முத்திரை குத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான எந்தவொரு கூட்டத்திலும் தான் ஈடுபடவில்லை என்று சம்சூரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அக்கூட்டம் தொடர்பான நடவடிக்கைகளில், தன்னை இணைத்து பேசுவதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.

அதேவேளையில், பாங்காக் நகர்வில் தன்னை இணைத்து பேச வேண்டாம் என்றும் அவர் அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வ பயணமாக தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்குச் சென்ற துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியை, எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியதாக சில தரப்புகள் கூறி வருகின்றன. அதற்கு பாங்காக் நகர்வு என்றும் பெயரிட்டுள்ளன.

Related News