May 4, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி
அரசியல்

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

Share:

புதிய கட்சியான பெரிகாத்தான் நேசனலில் தான் சேரலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு யார் கொடுத்தது என்று பெர்சாத்து கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹம்சா அக்கூட்டணியில் சேருவதை தன்னால் தடுக்க முடியும் என்று பெர்சாத்து தலைவரான முகைதீன் கூறியுள்ளது, அவர் மட்டுமே முழு அதிகாரத்தையும் வைத்திருப்பது போல் தோன்றுவதாக லாரூட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹம்சா தெரிவித்துள்ளார்.

மேலும், தான் பெரிக்காத்தான் கூட்டணியில் இணைய முடியாது என்று கூற முகைதீனுக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்றும் ஹம்சா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ்வாறு பெரிக்காத்தான் கூட்டணியில் தான் இணைந்து விட்டால், முகைதீன் தனது பதவியிலிருந்து விலகத் தயாரா? என்றும் ஹம்சா சவால் விடுத்துள்ளார்.

மேலும், அவ்வாறு முகைதீன் பதவி விலகுவதாக ஒப்புக் கொண்டால், தான் நிச்சயமாக பெரிக்காத்தான் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் ஹம்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முகைதீன் யாசின் கூறிய கருத்து ஒன்றில், பெரிக்காத்தான் கூட்டணிக்கும், ஹம்சாவுக்கு இடையிலான ஒத்துழைப்பை தன்னால் தடுக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் உட்பட பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட 16 எம்பிக்களும், பெரிக்காத்தான் கூட்டணியில் இணைய போவதாக அண்மைய தகவல்கள் கூறுகின்றன.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு