Sep 12, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு
அரசியல்

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களாக 10 சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் பாரிசான் நேஷனல் சார்பில் 8 பேரும், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் 2 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

பாரிசான் நேஷனல் சார்பில் பாலோங், லிங்கி, செம்போங், சுங்கை லூய், லெங்கேங், லாபு, கெமெஞ்சே மற்றும் சென்னா தொகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முறையே முஸ்தஃபா நாகூர், ஃபைஸால் ரம்லி, ஸைஃபுல் பாஹ்ரி இட்ரிஸ், ராஸி அலி, அஸ்னா அமீன், நூர் உமைரா ஹாசிம், சுஹைமிஸான் பிஸார் மற்றும் சியோவ் கோங் சூன் ஆகியோர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் செர்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஃபைருஸ் இசா மற்றும் சிக்கமாட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரஸாலி அபு சமா ஆகியோர் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நியமனக் கடிதங்களை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் யாங் டிபெர்துவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் இன்று இஸ்தானா பெசார் ஶ்ரீ மெனாந்தி அரண்மனையில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிமும் கலந்து கொண்டார்.

36 இடங்களைக் கொண்ட நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மொத்தம் 25 இடங்களில் வெற்றி பெற்று புதிய மாநில அரசாங்கத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்ப... | Thisaigal News