Sep 22, 2026
Thisaigal NewsYouTube
மக்களை அச்சுறுத்தும் ஆரோக்கியமற்ற பிரச்சாரம்' - குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில்
அரசியல்

மக்களை அச்சுறுத்தும் ஆரோக்கியமற்ற பிரச்சாரம்' - குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில்

Share:

மாநில தேர்தலில் பக்காதான் ஹரப்பான் வெற்றி பெற்றால், தொகுதி மறுசீரமைப்பு மூலம் மலாய் மற்றும் இஸ்லாமியர்களின் அதிகாரம் குறைக்கப்படும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை பக்காத்தான் ஹராப்பான் தொடர்புத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது மக்களை அச்சுறுத்தும் ஓர் ஆரோக்கியமற்ற பிரச்சாரம் என்று அவர் சாடினார். இன்று சிரம்பானில் உள்ள பெர்னாமா, தேர்தல் நடவடிக்கை அலுவலகத்திற்கு வருகை தந்த டத்தோஸ்ரீ ஃபாஹ்மி செய்தியாளர்களிடம் பேசுகையில், மலாய் அல்லது இஸ்லாமிய அதிகாரத்தைக் குறைக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றார்.

மேலும், மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூணின் எட்டு ஆண்டு கால ஆட்சியில் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான புதிய பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன என்றும், ஜகாத் வசூல் மற்றும் இமாம்களுக்கான அலவன்ஸ் உயர்வு ஆகியவை முந்தைய காலங்களை விட மிக அதிகமாக உள்ளது என்றும் அமைச்சர் ஃபாஹ்மி சுட்டிக்காட்டினார்.

எனவே, ஆதாரமற்ற வதந்திகளை நம்பாமல் வாக்காளர்கள் உண்மைகளின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும் என தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபஹ்மி கேட்டுக்கொண்டார்.

Related News

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்

மலாக்கா சட்டமன்றம் நாளை கலைப்பு – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

மலாக்கா சட்டமன்றம் நாளை கலைப்பு – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்