மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான அரசியல் களம் திறக்கிறது — மாநில சட்டமன்றம் நாளை கலைக்கப்படவுள்ளது.
மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவுஃப் யுசோ, மாநில ஆளுநர் துன் டாக்டர் முகமது அலி முகமது ருஸ்தாமின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம், பல வாரங்களாக நீடித்த சட்டமன்றக் கலைப்பு குறித்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
28 தொகுதிகளைக் கொண்ட மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுகள் நடைபெற்று வரும் நிலையில், உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்தனியாக போட்டியிடத் தயாராக இருப்பதாக இரு கூட்டணிகளும் தெரிவித்துள்ளன.
இதனிடையே, புதிதாக களமிறங்கிய பெர்சாமா கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டு தேர்தலில் பாரிசான் நேஷனல் 21 தொகுதிகளையும், பக்காத்தான் ஹராப்பான் 5 தொகுதிகளையும், பெரிக்காத்தான் நேஷனல் 2 தொகுதிகளையும் கைப்பற்றியது.








